Skip to main content

“நீர்நிலைகளை ஊராட்சி மன்றத்தலைவர்கள் பாதுகாக்க வேண்டும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

"The panchayat leaders should protect the water bodies" - Minister I. Periyasamy

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 46 கிராம ஊராட்சிகள் மற்றும் ஏழு பேரூராட்சிகளில் நீர்நிலைகள் அதிகம் உள்ளன. குறிப்பாக காமராஜர் நீர்த்தேக்கம், அய்யம்பாளையம் மருதாநதி நீர்த்தேக்கம், கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கம், வெள்ளோடு ஆனைவிழுந்தான் ராமக்காள் நீர்த்தேக்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. தற்போது பருவமழைபெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியைச் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவர்கள் மத்தியில் பேசிய போது, “கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியின்போது நீர்நிலைகளை பாதுகாக்காததால் ஆத்தூர் தொகுதியில் கடுமையான குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அதன்பின்பு குடகனாற்றில் இருந்து ஆத்தூர் தொகுதி முழுவதும் வரை ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பில் எனது சொந்த செலவில் குடகனாற்று வாய்க்காலை தூர்வாரியதால் அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தன. இம்முறை பருவமழை பெய்து வருவதால் ஊராட்சி மன்றத்தலைவர்கள் மழைநீரை வீணாக்காத வண்ணம் நீர்நிலைகளுக்கு (குளங்களுக்கு) செல்லும்படி நீர்வரத்து வாய்க்காலை தூர்வாரி பாதுகாக்க வேண்டும். குளக்கரைகளை பலப்படுத்தி, தண்ணீர் மறுகால் செல்லும் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதுதவிர மழையில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்