கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஆங்காங்கே பொதுாஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் சில தளர்வுகளும் அமலில் உள்ளது.
தமிழகத்தில் ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தேவையின்றி சுற்றுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் கண்டிப்பாக அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றோடு 1000 பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் கடும் அறிவிப்பையும் மீறி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புக்கோயில் முக்கம் கடைவீதியில் பீர்முகமது என்பவர் தனது காய்கறிக்கடையை திறந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். ஆய்வுக்காக சுற்றி வந்த தாசில்தார் சேக் அப்துல்லா பீர்முகமது கடை திறந்திருப்பதைப் பார்த்து அந்த கடைக்கு ஊரடங்கை மீறி கடை திறந்ததால் கடையை மூடி சீல் வைத்தார்.