![One day police custody for dmk mla Ithayavarman](http://image.nakkheeran.in/cdn/farfuture/KMzuskgjEKpwiM0W0BAoafrDWmjbTaNyy6YSDQriiAI/1595326927/sites/default/files/inline-images/xzfsfsf_1.jpg)
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள இள்ளலூர் கிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கடந்த 12 ஆம் தேதி சென்னை அருகே மேடவாக்கத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்ட நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதனையடுத்து அவரது ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கோரிய நிலையில், புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட இதயவர்மன் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் அளித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றிலிருந்து நாளை ஒரு மணி வரை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.