![No flood prevention action... killai people struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/yp9bfRUYOvh3kvXvlTYxS7XBgmFqOetyRPQhzoWOFqg/1607262709/sites/default/files/inline-images/r45745757.jpg)
கடலூர் மாவட்டம் வெள்ள பாதிப்பில் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் கிள்ளை பேரூராட்சியில் உள்ள குச்சிபாளையம் கிராம மக்களுக்கு வெள்ள பாதிப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிள்ளை கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி அந்த கிராமத்திற்கு அழைத்துச்சென்று உடனடியாக தலா 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது. சாலை ஓரங்களில் இருந்த முட்புதர்களை எல்லாம் ஜே.சி.பி மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. சாலை வசதிக்கான ஏற்பாடுகளை செய்வதாக அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்ததையடுத்து சாலைமறியல் விலக்கிகொள்ளப்பட்டது. கிள்ளை நகர தி.மு.க செயலாளர் கிள்ளைர வீந்திரன் மற்றும் 100-க்கும் மேற்பட்டபொதுமக்கள் கலந்து கொண்டனர்.