Published on 22/07/2018 | Edited on 22/07/2018
ராகுல்காந்தி பேசிப்பழக்கவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
![TAMILISAI](http://image.nakkheeran.in/cdn/farfuture/y9sr5htH8-an_7ATFns5KhVVZDgjn-D0aUEPPKwo7HE/1533347634/sites/default/files/inline-images/TAMILISAI_1.jpg)
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே எடப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில்,
பாராளுமன்றத்தில் அதிக ஆதரவுகள் இல்லை என தெரிந்தபோதிலும் தெலுங்கு தேசம் கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என்னை பொறுத்தவரை நேரத்தை வீணடிக்கும் செயல்தான்.
120 கோடி மக்களின் நலனுக்காக செயல்படும் பாராளுமன்றத்தின் நேரத்தை பாழடிக்க கூடிய ஒரு தேவையற்ற செயலாகவே தெரிகிறது. ராகுல்காந்தி பேசி பழகுவதற்கு 120 கோடி மக்களின் நலனுக்காக செயல்படும் பாராளுமன்றதின் பொன்னான நேரத்தை அவர்கள் வீணடித்துள்ளனர் என்பதே அவர்களுடைய சாதனை, பெருமை எனக்கூறினார்.