![Night watchman of the municipal office was rescued as a corpse!- Police investigation!](http://image.nakkheeran.in/cdn/farfuture/QKD19wUb7H1dPwLLg4Vdn76NSccIWMmtQSplcluO5OM/1663600363/sites/default/files/inline-images/n2053.jpg)
நாமக்கல்லில் பேரூராட்சி அலுவலக இரவு காவலாளி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லை அடுத்த நாமகிரிப்பேட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இரண்டு வருடங்களாக பரமசிவம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு பரமசிவம் பணிக்கு சென்ற நிலையில் இன்று அதிகாலை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள வாகனங்கள் நிற்கும் கொட்டகையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்துள்ளார்.
இதைக்கண்ட அதிர்ந்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பரமசிவத்தின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஆத்தூர்-ராசிபுரம் சாலையில் பல மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி அலுவலகத்திலேயே காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.