Published on 11/09/2021 | Edited on 11/09/2021
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆளிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில், வழக்கம் போல நேற்று (10.09.2021) இரவு பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டது. கோவில் பூட்டப்பட்ட நிலையில் இன்று காலை வழக்கம்போல் பூஜைக்காக கதவுகள் திறக்கப்பட்டபோது, கோவில் சன்னதியில் ஒரு துப்பாக்கியும் அந்த துப்பாக்கி வைப்பதற்கான உரையும் அருகருகே வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பூசாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக மணப்பாறை காவல்துறையினருக்கு கொடுத்த தகவல் அடிப்படையில் காவல்துறையினர் கோவிலுக்கு வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியைக் கைப்பற்றினர். தற்காலிக புதிய ரக துப்பாக்கி என்பதை உறுதிசெய்த அவர், இதை வேறு யாரேனும் வைத்துவிட்டுச் சென்றார்களா? அல்லது சமூகவிரோதிகள் பயன்படுத்தினார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது.