Skip to main content

நெடுவாசல் 150 வது நாள் போராட்டம்

Published on 09/09/2017 | Edited on 09/09/2017
நெடுவாசல் 150 வது நாள் போராட்டம்



புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மறு நொள் தொடங்கிய போராட்டம் மத்திய மாநில அரசுககளின் பேச்சால் 22 நாளில் தற்காலிகமாக கைவிடப்பட்ட நிலையில் நெடுவாசல் குழுவிடம் பேசிய படி மத்திய அரசு நடந்து கொள்ளாமல் ஒப்பந்த நிறுவனத்திடம் கையெழுத்து போட்டதால் ஏப்ரல் 12 ந் தேதி இரண்டாம் கட்ட போராட்டத்தை தெடாங்கி 150 வது நாளாக நடத்தி வருகின்றனர்.

இரண்டாம் கட்ட போராட்டம் தொடங்கி 150 நாட்கள் முடிந்துவிட்ட நிலையிலும் மத்திய அரசும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மாநில அரசு இது மத்திய அரசு திட்டம் என்று கைவிரித்துவிட்டது. அதனால் நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்