Skip to main content

'நீட் சூழ்ச்சி அம்பலமாகிவிட்டது' - உதயநிதி கருத்து

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

nn

 

நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே முதுநிலை மருத்துவர் கலந்தாய்வு இரண்டு சுற்று முடிந்திருக்கும் நிலையில், மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வுக்குச் சலுகையாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தை அதிகரிக்கவே நீட் தேர்வு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மருத்துவத்தில் முதுநிலை படிப்புக்கு நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளது.

 

nn

 

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நீட் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கட் ஆப் பூஜ்ஜியமாக குறைத்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய அறிவிப்பு நீட் தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது.  நீட் தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால் அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரி, பயிற்சி மையங்களை வளப்படுத்துவதற்குத்தான் நீட் தேர்வு என ஆரம்பம் முதலே திமுக கூறி வருகிறது. திமுக கூறி வந்தது தற்போது உண்மையாகியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்