Published on 08/06/2020 | Edited on 08/06/2020
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஆய்வறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று சமர்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிரத்யேகமாக உள் ஒதுக்கீடு வழங்க சிறப்புச்சட்டம் கொண்டுவருவது பரிசீலனையில் இருப்பதாகச் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்பு தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு எவ்வளவு என்பது பற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஒரு குழுவை தமிழக அரசு நியமித்தது. இன்று அந்தக் குழு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஆய்வறிக்கையை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.