Skip to main content

நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!

Published on 18/11/2017 | Edited on 18/11/2017
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!

நாகை மாவட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். 

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் நம்பியார் நகர் கிராமங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து கைது செய்திருப்பது மீனவ மக்களிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 அவர்களின் குடும்பங்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். இந்திய    அரசு உடனடியாக இலங்கை அரசிடம்பேசி அவர்களை விடுதலை செய்ய துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும், தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய அரசியல் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்