நாகை மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்ட அரசு இரத்ததான முகாமில் ஒரு சிலருக்கு மட்டுமே பாராட்டு சான்றிதல் வழங்கபடுவதாக கொடையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நாகை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்படுத்தியது.
தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தைமுன்னிட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், இரத்ததான கொடையாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தொடர்ந்து ரத்ததானம் வழங்கி சேவை செய்துவரும் நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடையம் வழங்கி கௌரவித்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியதை தொடர்ந்து மீதமுள்ள கொடையாளர்களுக்கு மருத்துவர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அப்போது மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலருக்கு மட்டுமே பாராட்டு சான்றிதல் வழங்கபடுவதாகவும், வருடத்திற்கு 1000 யூனிட் இரத்ததானம் வழங்கும் தங்களை மாவட்ட நிர்வாகம் அவமதிப்பதாகவும் கூறி நிகழ்ச்சியை விட்டு திடுதிபுவென வெளியேறினர்.
இதனால் அரசு நிகழ்ச்சி பாதியிலேயே முடிந்ததால், நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
மாவட்ட ஆட்சியர் இந்த நிகழ்சியில் மட்டும் வெளியேறிவிடவில்லை, பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறி நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை நோகடிப்பது அவரது வாடிக்கை, விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் அவர் கலந்துகொள்வதை ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து தவிர்த்து வந்தார், பிறகு விவசாயிகளின் தொடர் போராட்டத்தினால் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார், ஆனாலும் விவசாயிகள் கோரிக்கைகளை கூறும் போது கிளம்பிவிடுவார். அதேபோல் உள்நாட்டு மீனவர் நிகழச்சியில் கலந்துகொண்டவர் பாதியிலேயே வெளியேறியதால் அங்கு வந்திருந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதுபோல் ஏராளமான நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே போகலாம்,
மாவட்ட ஆட்சியர், ஆட்சியராக இருப்பதைவிட அதிமுக அமைச்சரோடு நெருக்கமாக இருப்பதைத்தான் விரும்புகிறார், அதே போல் தனியார் பள்ளி, கல்லூரி, நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார். மாவட்ட ஆட்சியர் நாகை மாவட்ட அதிமுகவில் அறிவிக்கப்படாத அதிமுக மாசெவாகவே செயல்படுகிறார்." என்கிறார்கள் சமுக ஆர்வளர்கள்.