Published on 07/04/2021 | Edited on 07/04/2021

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (06.04.2021) நடந்து முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பப்பட்டன. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் காவல்துறை, தேர்தல் அதிகாரிகள் பாதுகாத்துக் கொள்ளட்டும் என இருந்துவிடக்கூடாது. பாதுகாப்பு மையங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இரவு பகல் பாராமல் கண்விழித்துப் பாதுகாத்திட வேண்டும். தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்'' என தொண்டர்களுக்குத் தெரிவித்துள்ளார்.