தன்னை வெளியேற்றியதற்காக பிரசாத் ஸ்டூடியோ ரூபாய் 50 லட்சம் இழப்பீடு தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், 'பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதன் மூலம் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தனக்கு சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் வெளியேற்றியது நியாயமற்றது. தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் பிரசாத் ஸ்டூடியோ தலையிட தடை விதிக்கவும்' கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத், ரமேஷ் டிசம்பர் 17- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
பிரசாத் ஸ்டூடியோவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.