Skip to main content

105 நாட்கள்... எங்கே முகிலன்? நல்லக்கண்ணு, நெடுமாறன், திருமா ஆர்ப்பாட்டம்

Published on 01/06/2019 | Edited on 01/06/2019


 

சுற்றுச்சூழலியல் ஆர்வலர் முகிலன், சென்ற வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 13 பேரை போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டு கொன்றது சம்பந்தமான ஆவன படமொன்றை சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பிப்ரவரி 15ந் தேதி வெளியிட்டார்.   அன்று இரவிலிருந்து அவர் காணாமல் போனார்.

 

m


105 நாட்கள் ஆகியும் முகிலன் இருப்பிடம் பற்றி எந்த முன்னேற்றத்தையும் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை. இந்த சூழலின் பின்னனியில் தான் ஏற்கனவே முகிலனை மீட்க கோரி பல போராட்டங்கள் நடத்திய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் இன்று 1 ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசுக்கு எதிராக மாபெரும் ஆர்பாட்டம் நடத்தியது. 

 

m

 

கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் பழ.நெடுமாறன், தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமிஜெகதீசன், மார்க்ஸ்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ. சி.மகேந்திரன், காங்கிரஸ் கோபன்னா,  ம.தி.மு.க. மல்லை சத்யா, வி.சி.க. திருமாவளவன், த.வா.க.வேல்முருகன் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர்.

 

என் கணவர் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்  என்ற கேள்வியுடன் முகிலன் மனைவி பூங்கொடியும் இதில் கலந்து கொண்டார்.

சார்ந்த செய்திகள்