நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் வரும் மார்ச் 24ஆம் தேதி வரை பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பல்வேறு அறிவிப்புகளை வாசித்து வந்த அமைச்சர், கரும்பு கொள்முதல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான திட்டங்களை வாசிக்கையில் கரும்புக்கு ஊக்கத்தொகை டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். ''கரும்பு விவசாயிகள் கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க... கடந்த நிதிநிலை அறிக்கையில் 150 ரூபாய் ஏற்றிக்கொடுத்திருந்தார்கள் இந்த முறை 50 ரூபாய் ஏற்றியுள்ளார்கள். எனவே நல்லா கை தட்டலாம்... எதிர்க்கட்சியும் தட்டலாம்.... போனமுறை இதே அவையில் பணம்கேட்டு பணம்கேட்டு பத்து வருஷம் போராடினோம். பத்து வருஷம் போராடி...'' எனக்கூற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர். உடனடியாக வேளாண் பட்ஜெட் உரையைத் தொடர்ந்து வாசிக்க சபாநாயகர் அறிவுறுத்தியதால் மீண்டும் பட்ஜெட் உரையை தொடர்ந்தார் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.