மாணவர்கள் படிக்க இயலாத தரமற்ற பொறியியல் கல்லூரிகள் என அண்ணா பல்கலைக்கழகம் ஒரு பட்டியல் போட்டுள்ளது. அந்தப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 89 பொறியியல் கல்லூரிகளில் தரமற்றவை என விவரத்துடன் கூறியுள்ளது. அந்த 89 கல்லூரிகளில் பல முக்கிய விஐபிகள் நடத்தும் கல்லூரிகளும் அடங்குகிறது.
இதில் குறிப்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சரான கே சி கருப்பனனின் கல்லூரியும் உள்ளது, சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஈரோடு மாவட்டம் பவானி யைச் சேர்ந்தவர். இவர் ஈரோட்டிலிருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியில் பல கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் இன்ஜினியரிங் காலேஜ்.
இந்தக் கல்லூரி தரமற்றவை இதில் மாணவர்கள் சேர்க்கை கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அந்த லிஸ்டில் வருகிறது. ஒரு அமைச்சர் அதுவும் சுற்றுச்சூழல் அமைச்சர் தனது கல்லூரி தரமற்றது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பது என்றால் அமைச்சரின் கல்லூரியின் லட்சணம் எப்படி இருக்குமென கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.