![minister subramanian launched several scheme for food security department](http://image.nakkheeran.in/cdn/farfuture/KYIht7_gOzOhd7utRIEW106YCDDjDfmV6LYdrV47fU0/1683109719/sites/default/files/2023-05/food-1.jpg)
![minister subramanian launched several scheme for food security department](http://image.nakkheeran.in/cdn/farfuture/WfinJCBvu3rsOihH3rX6O_uV_Li-qfKpMpxU7zJBzs4/1683109719/sites/default/files/2023-05/food-2.jpg)
![minister subramanian launched several scheme for food security department](http://image.nakkheeran.in/cdn/farfuture/uT2ZqHa8VyIehZq-cG45vLyYRv2Bv03AD8B5o9Tq1Jk/1683109719/sites/default/files/2023-05/food-3.jpg)
![minister subramanian launched several scheme for food security department](http://image.nakkheeran.in/cdn/farfuture/5PKfPN2RcpX6IxfZiiCwfx-7qzdw-HkSX2voZRy6oj8/1683109719/sites/default/files/2023-05/food-4.jpg)
![minister subramanian launched several scheme for food security department](http://image.nakkheeran.in/cdn/farfuture/awH-j6-fxg7ZfDxV6-98cvWMjbfL_We2-kFuEfJmxdw/1683109719/sites/default/files/2023-05/food-5.jpg)
![minister subramanian launched several scheme for food security department](http://image.nakkheeran.in/cdn/farfuture/jaNEFjEFMNzQW4fYbFn1KXueI-qAto3xbvHka8MnnEI/1683109719/sites/default/files/2023-05/food-7.jpg)
![minister subramanian launched several scheme for food security department](http://image.nakkheeran.in/cdn/farfuture/8TEIpstb46TFXyHrKO2boQtkfF1hQQ4UgBQ77_12npE/1683109719/sites/default/files/2023-05/food-6.jpg)
![minister subramanian launched several scheme for food security department](http://image.nakkheeran.in/cdn/farfuture/q3tD9owpsaOZzezJ7qgVgi-QvIjklagoYm_UZRR0h80/1683109719/sites/default/files/2023-05/food-20.jpg)
Published on 03/05/2023 | Edited on 03/05/2023
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உணவுப் பாதுகாப்புத் துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைப்பேசி செயலியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (03.05.2023) அறிமுகம் செய்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.ப. செந்தில்குமார் இ.ஆ.ப., உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வீனா இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ச. உமா இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சண்முகக்கனி, உணவு பாதுகாப்புத் துறை இயக்குநர் மற்றும் கூடுதல் ஆணையர் தேவ பார்த்தசாரதி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.