
'ஜீ பூம் பா, ஜு மந்திரகாளி' இப்படி எதாவது கூறி, உடனே முதல்வராகிட வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்திருக்கிறார்.
மதுரை தெப்பக்குளம் பகுதிக்கு, நீர் கொண்டு செல்வதற்கான கால்வாய்களை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"பொதுநோக்கம் ஸ்டாலினுக்கு கொஞ்சம் கூட கிடையாது. அவருக்கு ஒரே கற்பனை, ஒரே நோக்கம் எப்படியாவது முதலமைச்சர் ஆகிடனும். 'ஜீ பூம்பா, ஜு மந்திரகாளி' இப்படி எதாவது சொல்லி முதல்வர் ஆகனுன்னு நினைக்கிறார். இது நடக்குமா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்" என்றார்.
மதுரையில் நடிகர்கள் அரசியலுக்கு வரக்கோரி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது குறித்த கேள்விக்கு, "அவர்களுடைய ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். ஜனநாயக நாட்டில் இதெல்லாம் தவறல்ல" என்றார்.