![minister kadambur raju press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/ybmXonFC38rpaSOltLsK_Ax0MJHGvQspPq-T1YdgRQg/1598355450/sites/default/files/inline-images/kadambur%20raju_1.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கியது. மேலும் சினிமா படப்பிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "அதிகளவில் மக்கள் கூடுவர் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களைத் திறக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் இயங்க அனுமதி தந்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். ஓ.டி.டி.யில் படங்களை வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல என்பது எனது கருத்து. வேறு வழியின்றி ஓ.டி.டி.யில் படம் வெளியிடுவதை விட சில காலம் பொறுத்திருப்பது தான் நல்லது". இவ்வாறு அமைச்சர் கூறினார்.