Published on 24/08/2023 | Edited on 24/08/2023
![cm mk stalin is going to Thiruvarur and nagapattinam district today](http://image.nakkheeran.in/cdn/farfuture/kVzNzu8Ih7eR3g254e6hd3yeoBQakBQiQNJS-lmoxec/1692845017/sites/default/files/inline-images/996_185.jpg)
முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, ஆட்சியர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதற்காக இன்று காலை 9 மணிக்குச் சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சிக்குச் செல்கிறார். பின்னர் அங்கிருந்து கும்பகோணம் சாலை மார்க்கமாகச் செல்லும் முதல்வர் திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நலத் திட்டங்களையும் தொடங்கி வைக்கவுள்ளார்.