நீலகிரியில் பொதுமக்கள் பார்வையிலேயே பசுமாட்டைப் புலி ஒன்று வேட்டையாடி கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. உதகையில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் நகர் அருகே அண்மைக் காலமாகப் புலி ஒன்று நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாட்டை பொதுமக்கள் பார்வையிலேயே புலி வேட்டையாடியுள்ளது. தொடர்ந்து புலி அதே பகுதியில் சுற்றி வருவதால் அச்சத்தில் உறைந்துள்ளனர். பொதுமக்களைப் பீதியில் ஆழ்த்தி வரும் புலியை வனத்துறைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நீலகிரியில் நான்கு மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்ற 'டி23' என்று பெயரிடப்பட்ட புலி ஆட்கொல்லிப் புலியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையினரின் பலநாள் தேடுதலுக்குப் பின் மயக்க ஊசி செலுத்தப்பட்டுப் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.