![j](http://image.nakkheeran.in/cdn/farfuture/HG6gwaqV0Jzw0o6J3icf54pFQDE9_owpcKV8gRCwZMo/1662828002/sites/default/files/inline-images/hh_3.jpg)
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய வரும் பொறியாளருமான ஜான் பென்னிகுக் சிலை திறப்பு விழா லண்டன் நகரில் எளிமையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு விழா ஒருங்கிணைப்பாளர் சந்தானம் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராசன். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ் செல்வன். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லண்டன் தமிழ் சங்க செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். சிலை திறப்பு விழாவிற்கு முன் அங்குள்ள தேவாலயத்திற்கு சென்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு பங்குத்தந்தை புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். அதன் பின்னர் கர்னல் பென்னி குக் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மாலை அணி வித்து மரியாதை மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஜான் பென்னிகுக் சிலையை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார்.
அதன் பின் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது.... தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழக மக்கள் போற்றும் சிறந்த மனிதராக ஜான் பென்னிகுக் உள்ளார் அவர் முல்லைப் பெரியாறு அணையை கட்டாவிட்டால் தென் தமிழகம் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும். குறிப்பாக தென் தமிழக மாவட்டமான மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் தேனி உட்பட பல மாவட்டங்கள் அவர் கட்டிய அணையால் பயன்பெற்றுள்ளன. ஆனால் மனிதநேயத்தோடு அவர் கட்டிய இந்த முல்லைப் பெரியாறு அணை அவர் மறைந்த பின்பும் அவருக்கு புகழைத் தேடித் தந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் லண்டனில் அவர் பிறந்த ஊரான கேம்பர்லியில் ஜான் பென்னிகுக் சிலையை திறந்து வைக்க வேண்டும் என உத்தர விட்டதால் நாங்கள் வந்துள்ளோம். அவர் சிலையை திறப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று கூறினார்.
இதில் லண்டன் தமிழ் சங்க உறுப்பினர்கள் ஜேம்ஸ்ராஜ், அன்பரசு, கோவிந்தராஜு, செல்வன் நாகதேவன்,பிரேம்குமார் மற்றும் லண்டன் கோவண்டி கல்லூரி மாணவர் தமிழகத்தை சேர்ந்த, அம்பை கார்த்திக் ரவி ,உட்பட பலர் கலந்து கொண்டனர்