கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பழைய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாரதி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் சிதம்பரம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளராக உள்ள அம்பேத்கர் மணமகனின் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்துக் கூறினார். மேலும் திருமணம் ஆனால் இருவரும் இருசக்கர வாகனத்தில் அதிகம் செல்லக்கூடும் எனவே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தாங்கள் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனக் கூறி அவர்களுக்கு தலைக்கவசத்தை பரிசாக வழங்கினார்.
இதனை மணமக்களும் நெகிழ்ச்சியாக பெற்றுக்கொண்டனர். அப்போது அங்கு கூடியிருந்த கிராம மக்கள் கைத்தட்டி வரவேற்றனர். மேலும் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களை அப்பகுதி பொதுமக்களிடம் அவர் பகிர்ந்துக் கொண்டார்.