![Minister Duraikkannu](http://image.nakkheeran.in/cdn/farfuture/DX8wGr0YUQ-uL4SRHCPuth_tHwhv27Bu5CTrKfqQVzA/1604231461/sites/default/files/inline-images/Dadadadad_1.jpg)
கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (72) காலமானார். அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு இறுதிச் சடங்கு தற்போது தொடங்கியுள்ளது. தஞ்சையில் உள்ள அவரது சொந்த ஊரான ராஜகிரியில் அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு நடத்தப்பட்ட அஞ்சலிக்குப் பிறகு வன்னியடியில் உள்ள தென்னந்தோப்பில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் காலமான அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.