Published on 18/10/2018 | Edited on 18/10/2018
திருவொற்றியூரில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞரை கஞ்சா ஆசாமி கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூரில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அருகிலுள்ள சாலையில் நேற்று இரவு மூர்த்தி என்ற இளைஞர் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த சாலைவழியாக வந்த மர்ம நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த மூர்த்தியின் மீது விழுந்துள்ளார். மேலும் திடீரென மூர்த்தியின் காது, கன்னம், கழுத்து பகுதிகளில் கடித்து குதறியுள்ளார் அந்த ஆசாமி. இதனால் கூச்சலிட்ட மூர்த்தியை அப்பகுதி மக்கள் ஓடிவந்து காப்பாற்றி அந்த மர்ம நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் காலடிபேட்டையை சேர்ந்த அப்துல் ஜதீதி எனவும் கஞ்சா போதையில் கடித்து குதறியதும் தெரியவந்தது. இதனை அடுத்து அப்துல் ஜதீதிதை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.