தற்போது தமிழகத்தில் தலைமை வெற்றிடம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு கட்சிக்கு தலைமை இருக்கலாம், ஆனால் தமிழகத்திற்கு ஒரு தலைமை இருக்கிறது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தமிழகத்தில் தற்போது உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்தால் மட்டும் தான் நிரப்ப முடியும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்திருந்தார்.
இதனிடையே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி என்று அழைக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்-ல் அப்படி எந்த பதவியும் இல்லை. அதைவிட குருமூர்த்தியை ரஜினிகாந்தின் விளம்பர தூதர் என்று அழைக்கலாம் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி கூறியுள்ளார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த குருமூர்த்தி, என்னை ஊடகங்கள் வி.பி.சிங், வாஜ்பாய், ஜெயலலிதா, மோடி ஆகியோரின் ஆலோசகர் என கூறியது. தற்போது ரஜினிகாந்தின் ஆலோசகர் என கூறுகிறது. ஆனால் நான் துக்ளக் இதழின் ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர் என்பதை தாண்டி ஏதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.