![Member of the Human Rights Commission who voluntarily sued](http://image.nakkheeran.in/cdn/farfuture/hOSu8h5fb__tEZY6-gN9Yw5AYD2xnRarGhwPuhGaffk/1619004261/sites/default/files/inline-images/velllore-inciden.jpg)
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் பழுது ஏற்பட்டது. அதன் காரணமாக 3 கரோனா நோயாளிகள் உள்பட 7 நோயாளிகள் பலியானார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக மருத்துவக் கல்வி இயக்குனருக்கும், மருத்துவக் கல்லூரி டீனுக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த செல்வராஜ், ராஜேஸ்வரி மற்றும் பிரேம் ஆகியோர் பலியாகினர். இதேபோல் ராஜேந்திரன், மதன், லீலாவதி, கபாலி ஆகிய ஆகிய 4 நோயாளிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து நடத்தினார் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளார்.