Published on 21/05/2022 | Edited on 21/05/2022
மயிலாடுதுறையில் அமைந்துள்ள தொன்மையான ஆதீனமான தருமபுர ஆதீனத்தில் ஆண்டுதோறும்பட்டினப்பிரவேசம் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அந்த நிகழ்வில் தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து பக்தர்கள் தூக்கிச் செல்வர். இந்தாண்டு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு தடை விதித்தது பெரும் சர்ச்சையான நிலையில், அந்தத் தடை திரும்பப்பெறப்பட்டது. இதையடுத்து, பட்டினப்பிரவேச நிகழ்வுக்கான ஏற்பாடு கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாளை பட்டினப்பிரவேச நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை நாற்காலி பல்லக்கில் தருமபுர ஆதீனம் உலா வந்தார். திருமடத்திலிருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்ட அவர், இதற்கு முன்பு குருமகா சன்னிதானமாக இருந்தவர்களை வழிபாடு செய்தார்.