



Published on 21/11/2020 | Edited on 21/11/2020
மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்.க்கான கலந்தாய்வு கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. கடந்த 18 முதல் 20ஆம் தேதி வரை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக் கலந்தாய்வு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வின்போது சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அங்கிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
இவர்களுக்கான கலந்தாய்வு, இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. அதன் பின் 23 -ஆம் தேதியிலிருந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.