Skip to main content

''அவர் இல்லையென்றால் சரித்திர தலைவர்களுக்கு அடையாளம் குறைந்திருக்கும்''-வைரமுத்து பேட்டி!

Published on 02/10/2021 | Edited on 02/10/2021

 

 '' Without him, the identity of historical leaders would have been less '' - Vairamuthu interview!

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனைக் கௌரவப்படுத்தும் வகையில் அவரது பிறந்த தினமான இன்று அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாளையொட்டி, சென்னை, அடையாறு சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (01/10/2021) மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். கவிஞர் வைரமுத்துவும் மரியாதையைச் செலுத்தினார்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து பேசுகையில், “ஒரு மனிதன் ஒரு உடலில் ஒரு வாழ்வு தான் வாழ முடியும். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி, தன் ஒரு உடலில் 100 வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அவரது பாத்திரங்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் சரித்திர தலைவர்களுக்கு அடையாளம் குறைந்திருக்கும். அவர் உச்சரித்த தமிழில்தான் தமிழ்நாட்டுப் பாமரன் கூட தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டான்”  என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்