![ghj](http://image.nakkheeran.in/cdn/farfuture/a_5AUk8OlKst5wJ6A_FNWmgmnERLzGxuF5JObFSSrzs/1623677657/sites/default/files/inline-images/1111_139.jpg)
அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பல்வேறு அதிரடி நீக்கங்கள் நடைபெற்றன. அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட சசிகலாவுடன் தொடர்பில் இருந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 15 பேர் அதிரடியாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் அதிமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்துவந்த வா.புகழேந்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிமுக தலைமை இன்று அதிரடியாக நீக்கியது.
இதுதொடர்பாக புகழேந்தி கூறியதாவது, " பாமகவை நேற்று விமர்சனம் செய்து பேசியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இபிஎஸ் ஆணவப்போக்கோடு செயல்பட்டு வருகிறார். சர்வாதிகாரியாகச் செயல்படும் பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் பாமகவின் ஆதரவுக்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.