“எல்லாமே தமிழ்நாட்டுல அரசியல் ஆயிருச்சு..” எனச்சொல்லும் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். “2011-ல் தமிழக முதல்வராக இருந்தார் கலைஞர். அரசாணை வெளியிடும்போது, காமராஜர் பிறந்த ஊரில் மெடிக்கல் காலேஜ் அமைக்கப்படும்னு சொன்னார். அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, கலைஞர் அறிவித்தபடி நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. சரி, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு டென்டல் காலேஜ் அமைப்போம்'னு சொன்னார் ஜெயலலிதா. அதுவும் அறிவிப்போடு நின்றுபோனது. அதிமுக ஆட்சியில் இந்த மாவட்டத்துக்கு எதுவும் வராது. எல்லாமே வெறும் வாய்ப்பேச்சுதான். அடுத்து பாருங்க.. திமுக ஆட்சிதான். ஏற்கனவே சொன்ன இடத்தில்.. கலெக்டர் அலுவலகத்துக்குப் பக்கத்தில் இருக்கிற வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கள் உள்ள இடத்துல மெடிக்கல் காலேஜ் வரும். அதோடு சேர்ந்து டென்டல் காலேஜும் வரும். மெடிக்கல் காலேஜுக்கான அத்தனை வசதிகளும் வந்துவிடும்.” என்கிறார்.
![medical college issue... Virudhunagar district hate politics!](http://image.nakkheeran.in/cdn/farfuture/TCdYFRsaulmkd0_JNDtPEEMSQhMOrKcTMyOeH8Bfc9g/1566572292/sites/default/files/inline-images/kkssrr_0.jpg)
ஆளும்கட்சி தரப்பிலோ, “50 கோடி ரூபாய் செலவில் விருதுநகரில் அரசு பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்றும் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் 2017-ல் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி. இந்திய மருத்துவக்கல்லூரி விதிமுறைகளின்படி மருத்துவக்கல்லூரி இல்லாமல் பல் மருத்துவக்கல்லூரி மட்டும் தொடங்கிவிட முடியாது. அனுமதி கிடைக்காது. அதனால்தான், பல் மருத்துவக்கல்லூரி திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை. ஏற்கனவே, காரியாபட்டி அருகிலுள்ள முடுக்கன்குளத்தில் பல் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து திட்ட வரைவெல்லாம் அனுப்பிவிட்டார்கள். தமிழக அரசிடமிருந்து நிச்சயம் அனுமதி கிடைத்துவிடும். அதிமுக ஆட்சியில் இந்த மாவட்டத்துக்கு மருத்துவக்கல்லூரியும் வரத்தான் போகிறது. இதைவைத்து அரசியல் பண்ணுவது கே.கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர்.தான்.” என்கிறார்கள்.
திமுகவோ, அதிமுகவோ, என்ன அரசியல் வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளட்டும். விருதுநகர் மாவட்டத்துக்கு மருத்துவக்கல்லூரி வந்தால் சரிதான்!