Published on 22/01/2025 | Edited on 22/01/2025

தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணிற்கு மேலாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தில் தனியார் நிறுவன அலுவலகம் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், இங்கு 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் மேலாளராக ராஜராஜன் என்பவர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ராஜராஜன் அந்த நிறுவனத்தில் பணியாற்று ஒரு பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
நாளுக்குநாள் ராஜராஜனின் தொல்லைகள் அதிகரிக்க பாதிக்கப்பட்ட பெண் தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார் ராஜராஜனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.