![man passed away near cuddalore police investigating](http://image.nakkheeran.in/cdn/farfuture/J5U6A-75btmCGYyvwYDGKePmqPLn_MyddLhz-Qmr3vY/1659071575/sites/default/files/inline-images/hand-in_236.jpg)
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் என்பவரது மகன் மணியரசன்(25). இவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணியரசன் குடும்பத்தோடு புவனகிரி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
மணியரசன் அவ்வப்பொழுது மது அருந்திவிட்டு, தன் மனைவிடம் சண்டைபோட்டுவந்துள்ளார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை இருந்துவந்துள்ளது. இதன் காரணமாக மணியரசின் மனைவி, சில நாட்களுக்கு முன்பு தன் தாய் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார். மணியரசு, மனைவியை தன்னுடன் அழைத்து வருவதற்கு மணியரசு முயற்சி செய்தும் அவர் வரவில்லை.
இந்நிலையில், மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழவைக்க அவரை அச்சுறுத்தும் நோக்கத்தில் மணியரசு, மது போதையில் தூக்குபோட்டுக்கொள்வதுபோல் நாடகமாடி வீடியோ எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், தூக்கு கயிறு அவரது கழுத்தை இறுக்கியுள்ளது. இதனால், மணியரசு கத்திக் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உறவினர்களின் புகாரின் போரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.