வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை வாகைக்குளம் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த பெர்டியன் ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு எஸ். சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடி, 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். கட்ந்த 6 ஆண்டுகளாக சாலை ஏன் மோசமாக உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கு விசாரனையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.