நாமக்கல் மாவட்டம் நடுக்கோம்பை ஊராட்சியில் போட்டியிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரின் மகன் யுவராஜ் திமுக வேட்பாளர் அழகப்பனை விட 4 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளர் யுவராஜ் 802 வாக்குகளும், திமுக வேட்பாளர் அழகப்பன் 806 வாக்குகளும் பெற்றனர்.
இந்நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரின் மகன் யுவராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அதிமுக. திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல்: வெற்ற நிலவரம் (05.35PM)
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் 19- வது வார்டில் அதிமுக வேட்பாளர் பூங்கோடி வெற்றி, முதுகுளத்தூர் ஒன்றியம் 3- வது வார்டில் திமுக வேட்பாளர் நாகஜோதி ராமர் வெற்றி.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய 1- வது வார்டில் திமுக வேட்பாளர் தாரணி ராஜேஷ் வெற்றி.
புதுக்கோட்டை: திருமயம் ஒன்றிய 13- வது வார்டில் திமுக வேட்பாளர் அழகு வெற்றி.
திருச்சி: மண்ணச்சநல்லூர் 1- வது வார்டில் பாஜக வேட்பாளர் பரமேஸ்வரி குமார் வெற்றி.
கிருஷ்ணகிரி: தளி ஒன்றியம் 1,2,3 ஆவது வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி.
சேலம்: நங்கவள்ளி ஒன்றியம் வீரக்கல் ஊராட்சிமன்ற தலைவராக முனுசாமி வெற்றி.
திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலை பெரியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் புஷ்பராணி வெற்றி.
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (298/515)
திமுக கூட்டணி: 142 முன்னிலை
அதிமுக கூட்டணி: 154 முன்னிலை
அமமுக: 2 முன்னிலை
ஒன்றிய கவுன்சிலர் பதவி (1252/5067)
திமுக கூட்டணி; 579முன்னிலை
அதிமுக கூட்டணி: 586 முன்னிலை
அமமுக: 29 முன்னிலை
பிற கட்சிகள்- 58 முன்னிலை