![Thunder](http://image.nakkheeran.in/cdn/farfuture/C7skGakiPFIrKcf-7_wOftVjQcy6396l58zQtFmQ8rM/1596441928/sites/default/files/inline-images/1527576646-4316.jpg)
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ளது சின்னபாபு சமுத்திரம். இந்த பகுதியில் ஸ்ரீ மகான் படே சாகிப் என்பவர் சித்தராக இருந்து ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் ஒரு கோயில் உருவாக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் மக்கள் இங்கு வருகை தந்து வழிபட்டு செல்கிறார்கள்.
இந்த கோயிலை அதே கிராமத்தை சேர்ந்த 57 வயது முருகையன் என்பவர் கடந்த 40 வருடங்களாக கோயில் பூசாரியாக இருந்து பூசை செய்து வருகிறார். கடந்த நான்கு மாதமாக கரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து கோயில் திறக்கப்படவில்லை. இதனால் கோயில் பூசாரி முருகையன் வருமானத்திற்கு வழி இல்லாததால் வருமானத்திற்காக வேண்டி பசு மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் அந்த மாடுகளுக்கு புல் அறுக்க வேண்டி வீட்டின் அருகிலுள்ள நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது மழைக்கு ஒதுங்கும் அதற்காக அங்கு உள்ள வேப்பமரத்தின் சென்று மழைக்கு ஒதுங்கி நின்றார் முருகையன். அப்போது அந்த மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் பூசாரி முருகையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தகவலறிந்த கண்டமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை போலீசாருடன் அங்கு விரைந்து சென்று முருகையன் சடலத்தை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
இடி தாக்கி பலியான பூசாரி முருகையன் மரணம் அப்பகுதி மக்களை வருத்தமடையச் செய்துள்ளது. இவருக்கு கற்பகம் என்ற மனைவியும்; கமலா, கலைச்செல்வி என்ற 2 மகள்களும் உள்ளனர்.