தமிழகத்தில் பொங்கல் திருநாள் தமிழர்கள் மத்தியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1-ஆம் தேதியில் சூரிய வழிபாடு, விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
போகியுடன் இன்று (13/01/2025)பொங்கல் கொண்டாட்டம் தொடங்கி இருக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அயலக தமிழர் தின விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலது தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'காலங்கள் கடந்தாலும் - நில எல்லைகள் பிரித்தாலும் உணர்வால் உறவால் உள்ளத்தால் என்றும் ஒன்றாகும் தாய்த்தமிழ் உடன்பிறப்புகளோடு அயலகத்தமிழர்_தினவிழா! வாழ்வதும் வளர்வதும் தமிழாகவும் தமிழினமாகவும் இருக்கட்டும்!'என பதிவிட்டுள்ளார்.
காலங்கள் கடந்தாலும் - நில எல்லைகள் பிரித்தாலும் உணர்வால் உறவால் உள்ளத்தால் என்றும் ஒன்றாகும் தாய்த்தமிழ் உடன்பிறப்புகளோடு #அயலகத்தமிழர்_தினவிழா!
— M.K.Stalin (@mkstalin) January 12, 2025
வாழ்வதும் வளர்வதும் தமிழாகவும் தமிழினமாகவும் இருக்கட்டும்!@Avadi_Nasar @pudugaiabdulla @ksivasenapathy#NonResidentTamilsDay pic.twitter.com/ngwI2jA9eO