Skip to main content

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

Published on 13/01/2025 | Edited on 13/01/2025
Powerful earthquake in Japan Tsunami warning

ஜப்பானின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கைஷூ என்ற இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது  ஏற்பட்ட அதிர்வுகள், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்