Skip to main content

ராகுல் நினைத்திருந்தால் 2009-லேயே பிரதமர் ஆகியிருக்கலாம்- கேஎஸ்.அழகிரி

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

 

ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ.அழகிரி பேசுகையில்,

 

KS ALAKIRI

 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் குறித்த உடன்பாடு தற்பொழுது கையெழுத்திகியுள்ளது.  இந்த உடன்படிக்கையில், திமுகவும் நாங்களும் இணைந்து செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை பெற்றிருக்கிறோம். இந்த உடன்பாடு மகிழ்ச்சியளிக்கிறது. திமுக தலைமை எந்தெந்த தொகுதிகள் என நாளை அறிவிக்கும்.15,16 ஆம் தேதி விருப்பமனு பெறுகிறோம் அதன்பின் வேட்பாளர் யார் என அறிவிப்போம். கண்டிப்பாக புதுமுகங்களுக்கு வாய்ப்புண்டு எனக்கூறினார்.

 

ராகுல் நினைத்திருந்தால் 2009-லேயே பிரதமர் ஆகியிருக்கலாம். மன்மோகன் சிங் அந்த வாய்ப்பை பலமுறை  அவருக்கு அளித்தார். ஆனால் ராகுல் காந்தி, பல கிராமங்களுக்கு செல்லவேண்டும், மக்களின் நிலையை அறியவேண்டும், இந்திய மக்களின் பிரச்சைனைகளை அறிய வேண்டும் எனக்கூறி மறுத்தார்.

 

ராகுல்காந்தி  கல்லூரி மாணவிகளிடம் பேசிய உரையாடல் மணிரத்தினம் படத்தின் உரையாடல் போல இருந்தது எனக்கூறினார்.

 

சார்ந்த செய்திகள்