தூத்துக்குடி மாவட்டத்தின் 19 வார்டுகளான கோவில்பட்டி யூனியனில் தி.மு.க.8 கூட்டணி சி.பி.ஐ1. 2 சுயேட்சை என தி்.மு.க. தரப்பிற்கு11 உறுப்பினர்கள் பெரும்பான்மை இருந்தது. இன்று அவர்கள் சேர்மன் தேர்தல் நடக்கிற யூனியன் அலுவலகத்திற்கு ஒன்றாக வந்தனர். அ.தி.மு.க. தரப்பிலோ 8 ஆதரவு கவுன்சிலர்கள் மட்டுமே. திடீரென தேர்தல் அலுவலரான ஜெயசீலன் 10 மணிவரை வராமல் போனதால், அவருக்கு ஹார்ட் அட்டாக் மருத்துமனையில் அட்மிட் என்று சொன்ன பி.டி.ஓ. மாணிக்கவாசகம் பின்னர் வருகிற அறிவிப்பைப் பொறுத்து என்றார்.
அதன் பின் மதியம் ஒரு மணிவாக்கில் தேர்தல் ஒத்திவைப்பு என்று சொல்லப்பட்டதால் எங்களுக்குப் பெரும்பான்மை உள்ளது. தேர்தல் நடத்தாத வரை வெளியே வரமாட்டோம் உண்ணாவிரதமிருப்போம் தேர்தல் எப்போது என்று சொல்லவேண்டும் அது வரை எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று தீர்க்கமாக சொல்லிவிட்டனர். தி.மு.க. கவுன்சிலர்கள். கடுமையான பரபரப்பு.
இதனிடையே ஸ்பாட்டுக்கு வந்த தி.மு.க. எம்.பியான கனிமொழியோ. இங்கே தி.மு.க. தரப்பிற்கு ஆதரவு இருக்கிறது. தி.மு.க. ஜெயித்துவிடும் என்பதால் அதிகாரிக்கு உடல் நலமில்லை என்று சொல்லி நிறுத்திவிட்டனர். இங்கு மட்டுமல்ல பல்வேறு யூனியன்களில் தி.மு.க.வுக்கு சாதகமாக இருந்த போதும் இது போன்று அதிகாரிகளுக்கு உடல் நலக்குறைவு தொற்றுநோய் என்று சொல்லி தேர்தலை நிறுத்துகின்றனர்.
ஒரு நல்ல டாக்டரைக் கொண்டு நோயைக் குணப்படுத்தவேண்டும். நாங்கள் இது போன்ற நடவடிக்கைகளைப் பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம். அவர்களின் நடவடிக்கையைப் பொறுத்து எங்களின் போராட்டமிருக்கும் என்றார்.
உச்சக்கட்டப் பரபரப்பிலிருக்கிறது கோவில்பட்டி யூனியன். ஒட்டப்பிடாரத்திலோ தி.மு.க.வின் இருதரப்பிலும் கவுன்சிலர்கள் சம பலமாக இருந்தால் திருவுளச்சீட்டின் மூலம் தி.மு.க.வின் ரமேஷ் வெற்றி.