தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்பது போல் இருந்து விட்டேன் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியார்களை சந்தித்த அவர்,
என்னுடைய அரசியல் வரலாறை நான் இரண்டாக பிரிக்க நினைக்கிறேன். கலைஞர் மறைவுக்கு முன் (கமமு), கலைஞர் மறைவுக்குப் பின் (கமபி) என இரண்டாக பிரித்துக் கொள்கிறேன். கலைஞர் என் குருநாதர், தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்பது போல் இருந்து விட்டேன்.
எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் காலங்களிலேயே நான் போராடி விட்டேன். ஜாம்பவான்கள் காலத்திலேயே போராடிய பிறகு, இந்த ஜாஜாவான்கள் காலத்தில் அரசியல் களத்தில் போராட முடியாதா?. தலை இருப்பவன் எல்லாம் தலைவனாக விரும்புவான், தலைவராவது மிகவும் கடினமான விஷயம். தலைமைக்கு புலமை, திறமை, கடுமை இருந்தால் மட்டும் போதாது. பொறுமையும் வேண்டும். தலைவர் பொறுப்பு என்பது, அது பயங்கரமாய் சுட்டெரிக்கும் நெருப்பு.
எனக்கு அரசியல் வனவாசம் முடிந்து விடிவு காலம் பிறந்து விட்டது. ஆன்மீக ரீதியில் சிந்தித்துப் பதில் சொல்ல வேண்டும் என முடிவு எடுத்துள்ளேன். சிம்புவை சுற்றி சதிவலை பின்னப்படுகிறது. சிம்பு நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியை தாங்க முடியாதவர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சட்டப்படி நாங்கள் சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.