அப்துல் கலாமின் அறிவியல் அலோசகரும் உதவியாளருமான பொன்ராஜ் அப்துல் கலாம் மறைவுக்கு பிறகு கலாமாகவே மாறி மாணவர்களை தேடி தேடி செல்கிறார். அவர்களின் உள்ள கிடங்கை வெளியே எடுத்து அவர்களின் திறமைகளை வெளியே கொடுவருவதே அவரின் குறிக்கோளாக இருக்கிறது.
அப்படிதான் கடந்த வருடங்களில் ”அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம்” சார்பில் தமிழக முழுவதும் சென்று பள்ளி கல்லூரி மாணவர்களை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதில் அவர்களை ஊக்குவிக்க கூடிய போட்டிகள் நடத்துவது மேலும் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அவர்களை தயார்படுத்துவது என்று சிரத்தை எடுக்கும் நிலையில், தற்போது மதுரையில் அப்துல் கலாம் 88வது பிறந்த நாளை தமிழகம் முழுவது உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களை நன்றாக பேசகூடியவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்குள் சிறந்த பேச்சாளர்களை தேர்வு செய்ய கருத்தரங்கம் நடைபெற்றது.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் பல்வேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டது. அதில் சிவகாசியை சேர்ந்த விஜய் ”உருவாக்கு உன் வாழ்வை” புதுச்சேரியிலிருந்து வந்த வெற்றிவேலுக்கு ”வள்ளுவரின் வழியில்”, தேனியிலிருந்து அழகேஸ்வரியின் உயிர் காக்கும் உயிரி தொழில் நுட்பம்” இராமநாதபுரம் அப்ரின் ”அப்துல் கலாமி எளிய வாழ்கைமுறை” என்று வெவ்வேறு தலைப்புகளில் பேசினாலும், கடைசியில் பேசிய அப்பர் உயர் நிலைபள்ளியில் 5ம்வகுப்பு மாணவி காவியா பேச்சே ஹை-லைடா இருந்தது அரங்கமே அந்த மழலையி பேச்சில் மயங்கி ஒன்ஸ்மோர் கேட்டு மீண்டும் பேசவைத்தனர்.
அவருக்கு கேடயமும் அப்துல் கலாமி புத்தகம் பரிசாக கொடுக்க குழந்தையோ நக்கீரனில் வெளியான ”ஆகலாம் அப்துல் கலாம்” புத்தகத்தை சுட்டிகாட்ட அந்த புத்தகத்தையே பரிசாக சேர்த்துகொண்டனர். கடைசியாக பேசிய பொன்ராஜ், நல்ல எண்ணங்களை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும் என்று அடிக்கடி அய்யா சொல்வார் மனமாற்றத்தைவிட குண மாற்றமும் வேண்டும். நாம் ஒவ்வொரு பள்ளியாக தேடி தேடி போய் மாணவர்களை நல்முத்தாக பார்க்க வேண்டும். அதன் பிரகாசத்தை ஜொலிக்கவைக்கவேண்டும். அதை உலகிற்கு கொண்டு செல்லும் வாகனமாக நாம் செயல்படவேண்டும் என்று சொல்வார். அவர் மறைந்த அன்று என் செவிகளில் அந்த வார்த்தை விழுந்து கொண்டே இருந்தது. ”மாணவர்களை தேடி” என்று அதில் எங்கள் அய்யா அப்துல் கலாமை போன்ற மனதையும் அசாத்தியமான அறிவையும் நற்குணத்தையும் மாணவர்களிடத்தில் விதைப்பது தான் இனி என் வேலை என்றார் பொன்ராஜ்.