“காவிகளே! களவாணிகளே!”
-விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கோஷம்!
நீட் தேர்வால் தனது மருத்துவ கனவை இழந்த அனிதாவின் தற்கொலை, தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. விருதுநகரிலும் மத்திய, மாநில அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும், பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக அமைச்சர்களுமே காரணம் என்று ஆர்ப்பாட்டத்தின் போது தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். “காவிகளே! களவாணிகளே!” என்று மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
-சி.என்.இராமகிருஷ்ணன்