![KK](http://image.nakkheeran.in/cdn/farfuture/6kmtNfJv8LL5FrqRYeHZFJT7bnOhdQ_9abGFpvZO7F8/1595355576/sites/default/files/inline-images/K23.jpg)
கரூரில் புகைப்பட அலுவலகத்தில் உள்ளே நுழைந்து அதன் உரிமையாளரை கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநங்கைகள் அவரை தாக்கியதாக செய்தி வெளியானதையடுத்து இதுகுறித்து விசாரித்தோம். தாக்குதலால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேந்தர் பாலசந்தர் அவருடைய தம்பி வழக்கறிஞர் பழனி குமார் ஆகியோரிடம் பேசினோம்.
அவர்கள் நம்மிடம், “கரூர் சேர்மன் ராமனுஜம் தெருவில் வசிக்கிறோம். யாழினி என்கிற போட்டோ ஸ்டியோ வைத்திருக்கேன். சில நாட்களுக்கு முன்பு கரூர் அடையார் ஆனந்த பவன் வந்துகிட்டு இருக்கும்போது, சில திருநங்கைகள் பணம் கேட்டாங்க. 200 ரூபாய் தான் இருக்கு, என்னிடம் சில்லரை இல்லைன்னு சொன்னேன், உடனே கையில் இருந்த 200 ரூபாயை பிடுங்கி, நாங்க சில்லரை தரோம் என்று சொல்லி எடுத்துட்டு அப்படியே நடக்க ஆரம்பிச்சுட்டாங்க, எனக்கு அதிர்ச்சியாயிடுச்சு, உடனே நான் சில்லரை தரேன்னு சொன்னீங்களே என்று கேட்கவும் அட போ… யா.. என்று இழுத்து சொல்லி அப்படியே நகர்ந்து போயிட்டாங்க, ஏற்கனவே சில பேரிடம் இதே போல் பண்றதை கேள்விப்பட்ட நான் இதை என்னுடைய முகநூலில்.. எழுதியிருந்தேன்..
இதை தெரிந்து கொண்ட 15க்கும் மேற்பட்ட திருநங்கைகள் என்னுடைய கடைக்கு வந்து, என்னை நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைப்பதாக கடைக்கு வந்திருக்காங்கன்னு என்னோட தம்பி எனக்கு தகவல் சொல்லவும், ஏதோ பிரச்சனைன்னு நினைச்சு முன்கூட்டியே கரூர் டவுன் போலிசுக்கு தகவல் சொன்னேன்.
![KK](http://image.nakkheeran.in/cdn/farfuture/t9g6YD7K-mVGvDg3ZapDKvieNJJIBGs39JH6Mqo4ozo/1595355595/sites/default/files/inline-images/K22.jpg)
நான் போறதுக்கும், போலிசு வரதுக்கும் சரியா இருந்தது, ஆனா அந்த திருநங்கைகள் எப்படி எங்களைப் பற்றி முகநூலில் எழுதலாம் என்று அசிங்க, அசிங்கமா பேசி அடிக்க ஆரம்பிச்சாங்க, பாதுகாப்புக்கு வந்த போலிஸ் அந்த திருநங்கைகளை தொடவே இல்லை, என்னைதான் அங்கிருந்து அப்புறப்படுத்தினாங்க, என்னோட இரண்டே கால் பவுன் செயின் அறுத்துட்டாங்க, என்னையும் என் தம்பியை கொலை வெறி தாக்குதல் நடத்திட்டாங்க” என்றார்.
![KK](http://image.nakkheeran.in/cdn/farfuture/sl24q2wozFGNvF4bsf0swK_2rHLKIV5I5ejp_Sh7uiU/1595355613/sites/default/files/inline-images/K21.jpg)
வழக்கறிஞர் சம்பத்திடம் இதுகுறித்து பேசினோம். அவர் நம்மிடம், “கடந்த 14ம் தேதி எல்.ஜி.பி பெட்ரோல் பங்க், அருகே டூவிலரில் வந்துகொண்டிருக்கும்போது ஒரு போன் வந்ததால் வண்டியை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தேன், மழை பெய்வது போல் இருந்தால் பணம், எல்லாத்தையும் வண்டியின் டேங்கவர் பகுதியில் வைத்திருந்தேன்,
அப்போது ஒரு திருநங்கை கும்பல் வந்து என்னை பேச விடாமல் 10 ரூபாய் பணம் கொடுக்குமாறு டார்ச்சர் பண்ணினாங்க, உடனே வேறு வழியில்லாமல் டேங் கவரில் இருந்து 10ரூபாய் பணம் எடுக்கும்போது, அங்கிருந்த இரண்டு 2,000 ரூபாய் நோட்டுகளை புடுங்கி, தலைமேல் வைத்து டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டாங்க, இந்த திருநங்கைகளில் இந்த செயல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
உடனே எவ்வளவோ கேட்டும் பணத்தை திரும்பி மறுத்ததால் உடனே நான்..கரூர் டவுன் ஸ்டேஷனுக்கு போன் பண்ணினேன்.. கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டிடர் உதயகுமார் அங்கு வந்தார், போலிஸ் அங்க வந்ததும், அந்த திருநங்கைகள் அசிங்கமாக பேசினார்கள். எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது, உடனே இன்ஸ்பெக்டர் சார், நீங்க கிளம்புங்க, காலையில் பேசிக்கலாம் என்று சொல்லி அந்த திருநங்கைகளை தன் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டார், இதை நான் புகாராக கரூர் டவுன் காவல் நிலையத்தில் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
காயமடைந்த சுரேந்தர் பாலசந்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 15 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்தது உள்ளது கரூர் டவுன் போலிஸ்.