


Published on 30/07/2018 | Edited on 30/07/2018
திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் முன்பு பேசினார்.
இதனைத் தொடர்ந்து கலைஞரின் குடும்பத்தினர் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் இருந்து இல்லங்களுக்கு திரும்பினர்.
இன்று காலை ஆ.ராசா காவேரி மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அவர் புறப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் கலைஞரின் உடல் நிலை சீராக உள்ளது. நலமாக உள்ளார் என்று தெரிவித்தார்.