Published on 05/02/2021 | Edited on 05/02/2021

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், 270 சதவீத கலால் வரியை பட்ஜெட்டில் போட்டுள்ள செஸ் வரி ரூபாய் இரண்டு மற்றும் நான்கு ஆகியவற்றை ரத்து செய்யக் கோரியும் திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.ஐ.டி.யு. திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி, பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.