![kalaignar](http://image.nakkheeran.in/cdn/farfuture/NUfQxQr11dvYAxF4eljdHAUtlW1Q13uD3P1iyxOy1iU/1533718666/sites/default/files/inline-images/80111_0.jpg)
உம்மீது பாசம் கொண்ட
நான் எழுதிகின்றதாவது,
காலத்தால் மறைக்க
இயலாத கலைஞரே
நீர் எங்கள் மனதில்
என்றும் இளைஞரே
இயற்கை உம்மை
ஆதரித்து இருந்தால்
உம் தமிழை மென்மேலும்
நான் இரசித்திருப்பேன்
உமக்கு முன்பாக
அதனை ருசித்து இறந்திருப்பேன்
பல மேதாவிகளை
உம் பேச்சாற்றலால்
மூச்சடைக்க வைத்தாய் பலரின்
மூச்சு காற்றை
உம் மூலம் சுவாசிக்க வைத்தாய்
திருக்குவளை என்ற
திருவாரூர் திண்ணையில்
எளியவனாக பிறந்து
வலியவனாக
தற்போதயை சென்னையில்
நீர் உம்மை உயர்த்தி கொண்டாய்
வரியவனுக்கும்
உம் மனசு ஆட்சியின் மூலம்
களைப்படையாமல்
களப்பணி ஆற்றினாய்
உமக்கும் மட்டும்
அல்ல
உம் உழைப்பிற்கும்
தலை வணங்குகிறேன்
எம் உயிரினும் மேலான
உடன் பிறவா
உன்னத செயல் வீரா
நீர் இறந்தும் உயிரோடு இருக்கிறாய்
எங்கள் இதயங்களில் என்றும்
கலந்திருக்கிறாய்...
வற்றா கண்ணீருடன்...
சா.பு .விக்னேஷ்,
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம்.
9543886686.