Published on 21/09/2018 | Edited on 21/09/2018
முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், நடிகருமான கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினார். அதில், காவல்துறை டி.சி. அரவிந்தனை நோக்கி சவால்விட்டப்படி பேசியதோடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு,
கருணாஸ் மட்டுமல்ல அவதூறு பரப்பும் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். மேலும் கைது நடவடிக்கை என்பது நீதிமன்ற உத்தரவுப்படிதான் நடக்கும். கருணாஸ் அரசியலை புரிந்து கொள்ளாமல் அரைவேக்காடு தனமாக பேசுகிறார் என கூறினார்.